புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா


புதுச்சேரில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 July 2021 3:37 AM IST (Updated: 14 July 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தற்போது 1,695 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 100 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் புதுச்சேரியில் 106 பேர், காரைக்காலில் 15 பேர், மாஹேவில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,19,181 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை புதுச்சேரியில் கொரோனாவால் 1,771 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,026 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 1,384 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story