ஆசனூர் அருகே சாலையோரம் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்


ஆசனூர் அருகே சாலையோரம் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 14 July 2021 4:17 AM IST (Updated: 14 July 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே சாலையோரம் காட்ெடருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.

தாளவாடி
ஆசனூர் அருகே சாலையோரம் காட்ெடருமைகள் கூட்டமாக உலா வருகின்றன. 
சாலையோரம்...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்ெடருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் தான் பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்லும் சாலை உள்ளது. அவ்வப்போது இந்த சாலையை வனவிலங்குகள் கடப்பது வழக்கம் 
அதன்படி நேற்று ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே காட்டெருமைகள் கூட்டமாக அங்குள்ள சாலையை கடந்து சென்றது. பின்னர் சாலையோரம் காட்டெருமைகள் கூட்டமாக மேய்ந்தபடி உலா வந்தன. 
நிறுத்த வேண்டாம்
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சாலையோரம் உலா வந்த காட்டெருமைகளை தங்களுடைய செல்போன் மூலம் படம் எடுத்தனர். சிறிது நேரம் சாலையோரம் உலா வந்த காட்டெருமைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. 
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வனவிலங்குகள் சாலையோரம் உலா வருகின்றன. எனவே வாகனங்களில் செல்பவர்கள், வனவிலங்குகளை கண்டால் தங்களுடைய வாகனங்களை ரோட்டில் நிறுத்த வேண்டாம்,’ என அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story