கோபியில் விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
கோபியில் விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்
கோபியில் விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விடுதி மேலாளர்
கோபி நாயக்கன் காடு பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி (வயது 56). இவருடைய மனைவி மோகனவள்ளி (46). நேசமணி நீலகிரி மாவட்டம் மசினகுடி என்னும் இடத்தில் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேசமணியின் அக்காள் கலைச்செல்விக்கும் அவரது தாயார் சங்கரம்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேசமணி மனம் உடைந்து காணப்பட்டார்.
விஷம் குடித்து...
இந்த நிலையில் நேற்று முன்தினம் நேசமணி கோபி நாயக்கன்காடு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோபி போலீசார் நேசமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story