வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த 4 பேர் கைது 11 பவுன் நகை-10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்


வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த 4 பேர் கைது 11 பவுன் நகை-10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2021 4:29 PM IST (Updated: 14 July 2021 4:29 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த 4 பேர் கைது 11 பவுன் நகை-10 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 21), ஹேமநாதன் (20), ராஜா (23) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரித்தபோது, தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் சில வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 11 பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள், 10 கிலோ பித்தளை பொருட்கள், டி.வி., 2 லேப்டாப் 15 கிலோ குத்து விளக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story