பள்ளிக் கல்வித் துறை, நூலகத் துறையில் கருணை அடிப்படையில் 261 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை
பள்ளிக் கல்வித் துறை, நூலகத் துறையில் கருணை அடிப்படையில் 261 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, 250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும்,
பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும், ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும், என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story