வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு


வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 11:27 AM GMT (Updated: 16 July 2021 11:27 AM GMT)

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிதாகச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, ஊரகத்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் .இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ். மக்வானா,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, நகர் ஊரமைப்பு இயக்குநர் எ.சரவணவேல்ராஜ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்தராவ், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் ச.சுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story