மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை + "||" + Elderly man commits suicide by setting himself on fire near Kunrathur

குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை

குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை
குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை.
பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ரஹ்மானியா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரம்மயா (வயது 62). நேற்று வீட்டின் எதிரே உள்ள முட்புதரில் உடல் தீ வைத்து எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பிரம்மயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில் பிரம்மயா மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என்பதும் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரிக்கரையோரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
மப்பேடு அருகே ஏரிக்கரையோரம் இருந்த முட்செடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
2. குடும்பத் தகராறில் விபரீதம் 3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை
வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. 'தற்கொலை தீர்வல்ல... தேர்வு, உயிரை விட பெரிதல்ல' - நடிகர் சூர்யா உருக்கம்!
தற்கொலை செய்து கொள்வது நெருக்கமானவர்களுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் தண்டனை - என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
5. அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மன அழுத்தத்தால் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை