திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பதவிஏற்பு
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு முறை நடுவர் மன்ற செயலாளராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியின் பொறியியல், வருவாய், நகரமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநகராட்சியின் வருவாய், வரி வசூல், நகரில் குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் குறித்து விவாதித்தார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story