கழுத்தை ெநரித்து தாய் கொலை; மகன் கைது
மதுரை அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை ெநரித்து தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்
புதூர்
மதுரை அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை ெநரித்து தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கண்டிப்பு
மதுரை அருகே உள்ள விரகனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பூமயில்(வயது 80). இவர்களது மகன் செந்தில்(40). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். இதனால் செந்திலின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், தனது வயதான தாயாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். தாயார் பூமயிலும் தனக்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை மூலம் கிைடத்த பணத்தை கொடுத்து வந்தார். இந்தநிலையில் செந்தில், தாயாரிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்த பூமயில், இப்படி ஏன் குடித்து விட்டு ஊர் சுற்றுகிறாய் என கண்டித்ததாக தெரிகிறது.
கழுத்தை நெரித்து கொலை
இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில், தாய் என்றும் பாராமல் பூமயில் கழுத்தை நெரித்துள்ளார். இதில் பூமயில் மூச்சிச்திணறி இறந்து விட்டார். இதுகுறித்து சிலைமான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story