பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிப்பு


பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிப்பு
x
தினத்தந்தி 17 July 2021 4:27 AM IST (Updated: 17 July 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டது. 
சாலை விரிவாக்க பணி
பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் பழுதடைந்து விட்டது. அதனால் பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளதால் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அணை பூங்கா முன்புறமுள்ள பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான 87 கடைகள் இடித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடைகளை ஏலம் எடுத்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 
கடைகள் இடிப்பு
இதையடுத்து முதல் கட்டமாக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 சாலை விரிவாக்கப் பணியை முடிந்தபின் இடிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு அதே பகுதியில் கடைகள் கட்ட இடம் ஒதுக்கப்படும் என பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story