குருவரெட்டியூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
குருவரெட்டியூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டார்கள்.
அம்மாபேட்டை
குருவரெட்டியூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டார்கள்.
பணித்தள பொறுப்பாளர்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 குழுக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு குழுவுக்கும், பெண்களிடம் வேலை வாங்கவும், தினசரி வருகையை கண்காணிக்கவும் பணித்தள பொறுப்பாளர் பணியில் இருப்பார். 3 குழுக்களிலும் 3 பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளனர்.
முற்றுகை
இந்தநிலையில் ஒரு குழுவின் பணித்தள பொறுப்பாளரை பணியில் இருந்து நீக்கி ஊராட்சி அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை, 100 நாள் வேலை செய்யும் பெண்கள் 80-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போலீசாரிடம் பெண்கள், பணித்தள பொறுப்பாளர் கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறார். திடீரென அவரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏற்க முடியாது என்றார்கள்.
அலுவலக விதிப்படி...
இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி தலைவர் அசோக்குமார் பெண்களிடம் பேசினார். அப்போது அவர், ‘அலுவலகத்தில் உள்ள விதிப்படி 100 நாட்களுக்கு ஒருமுறை பணித்தள பொறுப்பாளரை மாற்றவேண்டும். மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது நடைமுறைக்கு வரும் வரை ஏற்கனவே பணியாற்றிய பணித்தள பொறுப்பாளரே வேலை செய்வார்’ என்றார்.
அதை ஏற்றுக்கொண்டு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story