போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


போதை பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 17 July 2021 10:45 AM IST (Updated: 17 July 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலை அருகே நேற்று காஞ்சீபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் போலீசார் அந்த வழியாக வந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா, போதை பவுடர், போதை மாத்திரைகள் போன்றவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் போன்றவற்றை விற்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் 93447 89429 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தினர்.

Next Story