காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை


காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை
x
தினத்தந்தி 18 July 2021 2:16 AM IST (Updated: 18 July 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
காலிங்கராயன் வாய்க்கால்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு வருகிறது. அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் பாசனம் மூலமாக 15 ஆயிரத்துக்கும்         மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதில் நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இதில் தொடர்ந்து 10 மாதங்கள் தண்ணீர் திறக்கப்படுவதால் மஞ்சள் பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
பரிந்துரை
ரூ.76 கோடியே 77 லட்சம் செலவில் 21 பாலங்கள், 95 மதகுகள் கட்டும் பணிகளும், பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நிலுவையில் உள்ள சில பராமரிப்பு பணிகளையும் அடுத்த ஆண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் வருகிற 21-ந் தேதி காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

Next Story