தாளவாடி அருகே மரத்தில் லாரி மோதி விபத்து


தாளவாடி அருகே மரத்தில் லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 18 July 2021 2:38 AM IST (Updated: 18 July 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே மரத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உயிர் தப்பினார்கள்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சுரேஷ் (வயது 22) என்பவர் ஓட்டினார். கிளீனராக சக்திவேல் (21) என்பவர் இருந்தார்.
தாளவாடியை அடுத்த கும்டாபுரம் அருகே ஒரு வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் லாரி இடிபாடுகளுக்குள் சிக்கி சக்திவேல் லேசான காயம் அடைந்தார். சுரேசுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story