அந்தியூரில் 2 மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியது


அந்தியூரில் 2 மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியது
x
தினத்தந்தி 18 July 2021 2:54 AM IST (Updated: 18 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் 2 மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக அந்தியூர் வாரச்சந்தை மூடப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு பிறகு நேற்று அந்தியூரில் மாட்டுச்சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, மேச்சேரி, கொங்கணாபுரம், பர்கூர், எடப்பாடி மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் காங்கேயம் காளை மாடுகள் ஜோடி குறைந்தபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.1 லட்சத்துக்கும், நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கும், சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்துக்கும், ஜெர்சி இன பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கும் விலை போனது.
பர்கூர் காளை மாடுகள் ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், பர்கூர் இன பசு மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. 

Next Story