பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி


பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 July 2021 3:07 AM IST (Updated: 18 July 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனையானது. அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனையானது. அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 
பருத்தி
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த 2 வாரங்களாக புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. 
இந்த வாரம் நடைபெற்ற விற்பனைக்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி மற்றும் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை சுற்றுவட்டார விவசாயிகள் 7 ஆயிரத்து 916 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
விலை அதிகரிப்பு
இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்த பட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 416-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 529-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 கோடியே 7 லட்சத்து 11 ஆயிரத்து 835 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. தர்மபுரி, பொள்ளாச்சி, கோவை, அவினாசி, அன்னூர், சேலம், புளியம்பட்டி, கொங்கணாபுரம், அந்தியூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை வாங்கிச்சென்றார்கள். 
கடந்த வருடம் பி.டி. ரக பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. இந்த வருடம் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 

Next Story