காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலையா? 5 பேரிடம் போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மாயம்
காஞ்சீபுரம் தாயார் குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவர் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி தனது நண்பரை பார்க்க சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அய்யப்பன் மாயமானது குறித்து அவரது தாயார் கோவிந்தம்மாள் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார்.காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாயமான அய்யப்பனை கண்டுபிடிக்க கோரி சிவகாஞ்சி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அய்யப்பனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டனர்.
கொலையா?
முன் விரோதம் காரணமாக அய்யப்பன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் பல்லவர் மேட்டை சேர்ந்த ஆனை என்ற ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்களான முசரவாக்கத்தை சேர்ந்த சோமாஸ் என்ற செல்வம், பல்லவர் மேட்டை சேர்ந்த முருகன், அபி என்ற குணா, குள்ளி என்ற சுரேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story