2 பேரின் உயிரை குடித்த கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 615 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஏ.வெள்ளோட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டி, திண்டுக்கல்லை சேர்ந்த 69 வயது முதியவர் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று 7 பெண்கள் உள்பட மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 971 ஆனது. அதேநேரம் 22 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story