தொடர் மழையால் தலமலை வனச்சாலையில் மண்சரிவு
தொடர் மழை காரணமாக தலமலை வனச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
தாளவாடி
தொடர் மழை காரணமாக தலமலை வனச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழை
கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டு உள்ளது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்ல மாற்று பாதையான தலமலை வனச்சாலை வழியாக பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வனச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அந்த வழியாக செல்ல வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில் தாளவாடி, தலமலை, ஆசனூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
மண் சரிவு
தொடர் மழை காரணமாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையில் ராமரணை அருகே உள்ள மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. சாலையோரமாக மண், கற்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. இருந்தாலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். விரைவில் மண் சரிவை சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story