கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்; மது பிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் தண்ணீர்பந்தல்பாளையத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஈரோடு
கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் தண்ணீர்பந்தல்பாளையத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடை
நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கெட்டிச்செவியூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடை, தேர்தலை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் திடீரென மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து பூந்தோட்டம் என்ற இடத்தில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள் வருமானத்தில் பாதியை மதுவிற்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதியில் சாராய விற்பனையும் அதிகரித்துள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இங்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டி உள்ளது. எனவே தண்ணீர்பந்தல்பாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
கோவில் பூசாரிகள்
பூசாரிகள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் கோபால் தலைமையில் பூசாரிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கிராமம் மற்றும் நகர்புற பகுதியில் பூஜை செய்து வரும் பூசாரிகள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூசாரிகள் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சொந்த வீடு இல்லாத பூசாரிகளுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க வேண்டும். பெரிய கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை அருகில் உள்ள கிராம கோவில்களுக்கு வழங்கி கோ பூஜை, பால் அபிஷேகம் செய்திட உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story