சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம்; நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம்; நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 2:57 AM IST (Updated: 20 July 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னிமலை
சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
பள்ளம் 
சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் கணுவாய் என்ற இடத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது. 
மாநில நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் பல்வேறு ஊர்களுக்கு இரவு, பகலாக சென்று வருகின்றன. பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வரும் வாகனங்களுக்காக வழி விட வேறு ஏதாவது வாகனங்கள் ஓரமாக செல்லும்போது பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விபத்தில் சிக்கி விடும் ஆபத்து  உள்ளது. 
சரி செய்ய...
மேலும் அதிக போக்குவரத்து காரணமாக சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இந்த அபாய குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி விடும் நிலை உள்ளது. 
எனவே பெரும் விபத்து நிகழ்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story