தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 20 July 2021 3:10 AM IST (Updated: 20 July 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள சின்னசெம்மேட்டுபட்டியை சேர்ந்தவர் சின்னுகாளை. இவருடைய மகன் ஆண்டிச்சாமி (வயது 38). விவசாய கூலி தொழிலாளி. இவரும் அதே ஊரை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் பாண்டீஸ்வரன் (26) சின்னன் மகன் பெரியசாமி (45) ஆகிய 3 பேரும் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் 3 பேரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.அதன் பின்னர் இவர்கள் 3 பேரும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.இந்த நிலையில் மறுநாள் காலையில் ஆண்டிச்சாமி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஆண்டிச்சாமி தலையில் காயம் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் நடந்த தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பாண்டீஸ்வரன், பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


1 More update

Related Tags :
Next Story