மாவட்ட செய்திகள்

படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம் + "||" + A fire broke out in a factory office near Padappai

படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
படப்பை அருகே தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்துர் கிராமத்தில் கார் முகப்பு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் கேபிள் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென தொழிற்சாலையின் அலுவலக பகுதியில் ஜெராக்ஸ் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முதல் தளத்தில் பற்றிக்கொண்டதில் புகை மூட்டமானது.


இதனைப்பார்த்த தொழிற்சாலையின் காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் நாசம்

தீயணைப்பு வீரா்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கேபிள் ஒயர்கள், மெத்தை நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதனால் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவா? அல்லது வேறு தேனும் கரணமா? என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
3. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
4. வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து
வடக்கு மாசிடோனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 14 பேர் பலி.
5. தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீ
சிவகாசியில் தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீப்பிடித்தது.