ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது


ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது
x
தினத்தந்தி 20 July 2021 9:10 PM GMT (Updated: 20 July 2021 9:10 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது.

ஈரோடு
கொரோனா 2-வது அலை பாதிப்பு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயங்க தொடங்கின. அதிகபட்சமாக 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. முதல்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதன்பிறகு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் 50 சதவீத பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக ஈரோட்டில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. அதேசமயம் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே ஈரோட்டுக்கு வந்து சென்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதில் முதல்கட்டமாக 60 தனியார் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Next Story