கழுத்தை நெரித்து தொழிலாளி கொலை


கழுத்தை நெரித்து தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 21 July 2021 7:46 PM GMT (Updated: 2021-07-22T01:16:48+05:30)

திருப்பரங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி ெதாழிலாளி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம், 
ஜூலை
திருப்பரங்குன்றம் அருகே குளத்தில் மூழ்கி ெதாழிலாளி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது. இது தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மரம் வெட்டும் தொழிலாளி
திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளப்பாறைபட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 தினங்களுக்கு முன்பு வேடர்புளியங்குளத்தில் உள்ள ஒரு குளத்தில் மூர்த்தி, தனது நண்பர் சின்னசாக்கிலிப்பட்டியை சேர்ந்த செல்வம் (37) என்பவருடன் குளிக்க சென்றார்.
அங்கு மூர்த்தி குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்ததாகவும், அப்போது செல்வம் கடைக்கு ஷாம்பு வாங்க சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மூர்த்தி தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கழுத்து நெரித்து கொலை
பிரேத பரிசோதனையில் மூர்த்தியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூர்த்தி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மூர்த்தியுடன் குளிக்கச் சென்ற அவரது நண்பர் செல்வத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story