கத்திமுனையில் செல்போன்- கேமரா பறிப்பு


கத்திமுனையில் செல்போன்- கேமரா பறிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 8:06 PM GMT (Updated: 2021-07-22T01:36:22+05:30)

கத்திமுனையில் செல்போன் கேமரா பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்,ஜூலை
திருப்பரங்குன்றம் அருகே உள்ள சம்பக்குளம் மேற்கு தெருவில் வசித்து வருபவர் விஜயபாண்டி (வயது 23). போட்டோகிராபரான இவர் இரு சக்கர வாகனத்தில்  சம்பக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயபாண்டி மீது மோதுவது போல் வந்தனர். இதனால் அவர் சுதாரித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி விஜயபாண்டியிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், கேமரா ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசில் விஜயபாண்டி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story