தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 8:08 PM GMT (Updated: 2021-07-22T01:38:30+05:30)

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருமங்கலம், ஜூலை
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலை (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மாலை தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை அதிகமானதால் மன வேதனை அடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story