நாய் திருடிய வாலிபர் கைது


நாய் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 8:10 PM GMT (Updated: 2021-07-22T01:40:58+05:30)

நாய் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,ஜூலை
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 38), ஆவின் ஊழியர். இவர் தனது வீட்டில் நாய், புறா உள்ளிட்ட செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் கட்டி போட்டு இருந்த நாயை காணவில்லை. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் மாயமான நாயை ஒருவர் ஆட்டோவில் கொண்டு செல்வதை பார்த்த சரவணக்குமாரின் நண்பர் அவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து போலீசாரிடம் கூறினார்.
போலீசார் விரைந்து செயல்பட்டு மேலமடை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். அதில் நாயை கடத்திச் சென்றவர் ஆழ்வார்புரத்தை சேர்ந்த அர்ஜூன் (30) என்பது தெரியவந்தது. 
பின்னர் போலீசார் அவரை கைது செய்து, ஆட்டோவுடன் நாயை பறிமுதல் செய்தனர்.

Next Story