வாலிபர் கொலை


வாலிபர் கொலை
x
தினத்தந்தி 22 July 2021 1:43 AM IST (Updated: 22 July 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதூர்,ஜூலை
மதுரை சிலைமான் போலீஸ் சரகம், சக்கிமங்கலம் சமத்துவபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வி (வயது 27). அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி (21), கல்மேடு அரேபியா என்ற கார்த்திக் (வயது 21), ஜோதிமணி (24) ஆகிய 3 பேரும் செல்வியிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். இதனை அவரது அண்ணன் வினோத் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் வினோத்தை சரமாரியாக தாக்கினர். இவர் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டி, அரேபியா என்ற கார்த்திக், ஜோதிமணி ஆகிய 3 பேைரயும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story