மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 345 ஆக குறைந்தது + "||" + The number of people receiving treatment for corona has dropped to 345

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 345 ஆக குறைந்தது

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 345 ஆக குறைந்தது
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 345 ஆக குறைந்தது
மதுரை,ஜூலை
மதுரையில் நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 16 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. 
இதுபோல், நேற்று 43 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 24 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 797 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 345 ஆக குறைந்துள்ளது. இதில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவர். இது போல் 103 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். மதுரையில் சில தினங்களாகவே கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.