பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 21 July 2021 9:11 PM GMT (Updated: 2021-07-22T02:41:57+05:30)

பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானி
பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  
காலிங்கராயன் வாய்க்கால்
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பிரிக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் பவானி காலிங்கராயன்பாளையம் முதல் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வரை பாய்கிறது. 
இதன் மூலம் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
தண்ணீர் திறப்பு
இதற்கான விழா பவானி காலிங்கராயன்பாளையத்தில் நடைபெற்றது. கீழ்பவானி வடிகால் கோட்ட செயற்பொறியாளர் அருள் விழாவுக்கு தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பழனிக்குமார், செயலாளர் செல்வக்குமார் மற்றும் பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் விழாவில் கலந்துகொண்டு மதகை திறந்து தண்ணீரை திறந்துவிட்டனர். சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் பூக்கள் தூவப்பட்டது. 
120 நாட்களுக்கு...
பின்னர் இந்த விழாவில் மொடக்குறிச்சி பா.ஜ.க. சரஸ்வதி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் வந்து கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து தண்ணீரில் பூக்களை தூவி வணங்கினார்.
வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கீழ்பவானி வடிகால் கோட்ட செயற்பொறியாளர் அருள் கூறினார். 

Next Story