அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது


அந்தியூர் அருகே  4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 21 July 2021 9:16 PM GMT (Updated: 2021-07-22T02:46:40+05:30)

அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்
அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். 
பாலியல் தொல்லை
அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 வயதுடைய சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டு இருந்தார். அவருடைய பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டார்கள். 
அப்போது அங்கு சென்ற தேவராஜ், சிறுமியிடம் நைசாக பேசி தான் தங்கியிருந்த வீடு அருகே கூட்டிச்சென்றுள்ளார். சிறுமி உடனே அடம் பிடித்து தன்னுடைய வீட்டுக்கு ஓட முயன்றுள்ளார். உடனே தேவராஜ் சிறுமியின் வாயை பொத்தி, பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
போக்சோவில் கைது
இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து சிறுமியை மீட்டார்கள். தேவராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே பதறி அடித்து வந்த பெற்றோர் மகளை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அந்தியூர் போலீசிலும் புகார் அளித்தார்கள்.
அதன்பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று அதிகாைல போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். 

Related Tags :
Next Story