மாவட்ட செய்திகள்

மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது + "||" + Arrested

மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய மாவு மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி பகுதியில் ரேஷன்அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் அரிசி மூடைகளுடன் வருவதை கண்டனர். அவர்களை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த மாவு மில் உரிமையாளர் ஜெயகுமார் (வயது 56), சிம்மக்கலை சேர்ந்த வினோத் (36) என்பதும், அவர்கள் ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் படி அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 875 கிலோ அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில் குருக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன்கள் பறித்த 2 பேர் கைது
குளித்தலை அருகே கோவில் குருக்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன்கள் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. வீட்டில் பதுக்கி வைத்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
சின்னசேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசியை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
3. அண்ணன் அடித்துக்கொலை; வாலிபர் கைது
கல்லல் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வாகனங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
வாகனங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
5. சின்னசேலத்தில் பெண் வக்கீலை தாக்கிய கணவர் மாமனார் கைது
சின்னசேலத்தில் பெண் வக்கீலை தாக்கிய கணவர் மாமனார் கைது