ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி


ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 22 July 2021 8:41 PM GMT (Updated: 22 July 2021 8:41 PM GMT)

தென்காசியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி ரப்பானியா அரபிக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் தொகுத்து வழங்கினார். அரபிக் கல்லூரி தாளாளர் சம்சுதீன் இறைவணக்கம் செய்து தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முகமது அலி வரவேற்றார். பழனி நாடார் எம்.எல்.ஏ., நெல்லை ஷிபா ஆஸ்பத்திரி உரிமையாளர் ஷாபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தென்காசி மீரான் மருத்துவமனை டாக்டர் அப்துல் அஜீஸ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தேர்தல் பொறுப்பாளர் அமீர்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் சித்திக், முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலாளர் முகமது சலீம், வர்த்தக சங்க செயலாளர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story