மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் கடைக்காரர் மீது வழக்கு + "||" + Case

போக்சோ சட்டத்தில் கடைக்காரர் மீது வழக்கு

போக்சோ சட்டத்தில் கடைக்காரர் மீது வழக்கு
மதுரையில் திருமணம் செய்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக கடைக்காரர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,

மதுரை ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 49). ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் கட்டிட பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு 17 வயது சிறுமி வீட்டு வேலைக்கு வந்திருந்தார். அப்போது பாக்கியத்திற்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதை அறிந்த உறவினர்கள் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அந்த சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது.  இது தொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாக்கியம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊதியம் பெறுவோர் சி.எஸ்.ஐ. மண்டல தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு
அரசு ஊதியம் பெறுவோர் சி.எஸ்.ஐ. மண்டல தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2. 4 பேர் மீது வழக்கு
இளையான்குடி அருகே நிலத்தகராறில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.
3. செம்மண் கடத்திய 3 பேர் மீது வழக்கு; லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல்
செம்மண் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் மீது வழக்கு
நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. அரசு பஸ் மீது கல்வீச்சு; டிரைவர் காயம்
தேவகோட்டையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.