மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் வாலிபர் சரண் + "||" + Surrender in murder case

கொலை வழக்கில் வாலிபர் சரண்

கொலை வழக்கில் வாலிபர் சரண்
பேரையூர் கோர்ட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சரண் அடைந்தார்.
பேரையூர்,

மதுரை கூடல்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பிரவீன்குமார் (வயது 21) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை ஆனையூரை சேர்ந்த பட்டாளம் என்பவரது மகன் கோபிநாத் (வயது 26) என்பவர் பேரையூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிபதி முத்துசாமி 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.