உசிலம்பட்டி,
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கியாஸ் சிலிண்டருக்கும், இருசக்கர வாகனத்துக்கும் மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர