ஆக்கிரமிப்பு அகற்றம்


ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 22 July 2021 9:51 PM GMT (Updated: 2021-07-23T03:21:38+05:30)

கள்ளிக்குடி அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திருமங்கலம்,

கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணரசி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீடு கட்டினார். அப்போது வீடு கட்டுவதற்காக பயன்படுத்தி வந்த பொருட்களை பள்ளி முன்பு இருந்த இடத்தில் போட்டு அதை ஆக்கிரமித்து இருந்தார். இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற அவருக்கு ஊராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. அவர் அங்கிருந்து பொருட்களை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று கள்ளிக்குடி தாசில்தார் திருமலை, வருவாய் ஆய்வாளர் சகுந்தலாதேவி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.Next Story