தபால் ஊழியர் மீது வழக்கு


தபால் ஊழியர் மீது வழக்கு
x

தபால் ஊழியர் மீது வழக்கு

ராமநாதபுரம்
திருவாடானை அருகே உள்ள சின்னகீரமங்கலத்தில் துணை அஞ்சலகம் உள்ளது. இந்த அஞ்சலகத்தில் கிராம அஞ்சலக ஊழியராக பணியாற்றி வந்தவர் குமார். இவர் கடந்த 1999 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அஞ்சலகத்திற்கு பணம் செலுத்த வந்த 15 வாடிக்கையாளர்களிடம் அவர்களின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்காமல் ரூ.48 ஆயிரம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல, இறந்தவர் போட்டு வைத்த வைப்பு நிதியினை வாரிசுதாரருக்கு வழங்க வேண்டிய ரூ.30 ஆயிரத்தையும், 6 வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த அஞ்சலக ஏ.டி.எம். கார்டினை பயன்படுத்தி ரூ.15 ஆயிரத்து 200 என ஆகமொத்தம் ரூ.93 ஆயிரத்து 200 கையாடல் செய்து மோசடி செய்துவிட்டாராம். இது அஞ்சலக தணிக்கையின்போது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த மோசடி குறித்து திருவாடானை அஞ்சலக துணை கோட்ட ஆய்வாளர் போற்றிராஜா ராமநாதபுரம்போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story