மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மில் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 July 2021 10:24 PM IST (Updated: 23 July 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மில் தொழிலாளி பலியானார்.

வாடிப்பட்டி,ஜூலை
மதுரை பாலரெங்காபுரம் சி.எம்.ஆர். ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் (வயது 52). மில் தொழிலாளி. இவர் நேற்று மதியம் மதுரையில் இருந்து வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் கட்டிட வேலை செய்யும் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் வந்தார். இடம் தெரியாமல் மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் குலசேகரன்கோட்டை பிரிவு வரை சென்ற அவர் மீண்டும் அங்கிருந்து கட்டக்குளம் பிரிவிற்கு செல்ல  திண்டுக்கல் மதுரை சாலையில் திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக சேலத்திலிருந்து மதுரைக்கு வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் கார், மோட்டார்சைக்கிள் உருக்குலைந்தது. இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த சரண்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story