மேலும் 27 பேருக்கு கொரோனா


மேலும் 27 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 July 2021 5:00 PM GMT (Updated: 2021-07-23T22:30:54+05:30)

மதுரையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை, ஜூலை
மதுரை மாவட்டத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. 
இதுபோல், நேற்று 33 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 18 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் 71 ஆயிரத்து 871 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 319 ஆக குறைந்துள்ளது. 
மதுரையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

Next Story