மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு


மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 July 2021 7:39 PM GMT (Updated: 2021-07-24T01:09:14+05:30)

கல்லலில் மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்லல்,

கல்லல் நற்கனி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. போலீசாரின் சோதனை சாவடிகளையும் மீறி வயல்வெளிகளிலும் பொட்டல்களிலும் கட்டு மாடுகள் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.இது தொடர்பாக கல்லல் கிராம நிர்வாக அதிகாரி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கட்டுமாடுகளை அவிழ்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.


Next Story