அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாமி தரிசனம்
கொரோனா விதிகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், பூசாரிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு
அதேபோல வத்திராயிருப்பு பஜாரில் உள்ள முத்தாலம்மன், வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் அமைந்துள்ள மந்தை மாரியம்மன், மேலத்தெருவில் உள்ள சந்தன மாரியம்மன், வடக்குதெருவில் உள்ள வடக்காச்சி அம்மன், தாணிப்பாறை விலக்கில் அமைந்துள்ள அம்மச்சியாரம்மன் உள்பட பல்வேறு பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம், ஏ.லட்சுமிபுரம், மாதாங்கோவில்பட்டி, சுண்டங்குளம், நரிக்குளம், காளவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள காளியம்மன் கோவில்களில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story