ஓடும் லாரியில் திருட்டு


ஓடும் லாரியில் திருட்டு
x
தினத்தந்தி 24 July 2021 1:49 AM IST (Updated: 24 July 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் லாரியில் காம்ப்ளான் பாட்டில்கள் திருடப்பட்டன.

கொட்டாம்பட்டி,
ஜூலை
கமுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு சொந்தமான லாரியில் மதுரை உலகனேரியை சேர்ந்த பாதர் வெள்ளை (வயது38) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை செங்குன்றத்தில் இருந்து காம்ப்ளான் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மதுரை சிப்காட்டுக்கு லாரியை ஓட்டி வந்தார்.
வழியில் சமயபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்தி லாரியை சோதனை செய்துவிட்டு மீண்டும் லாரியை மதுரை நோக்கி ஓட்டி வந்தார். கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் அதிகாலையில் லாரியை நிறுத்தி பார்த்தபோது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு 16 பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான காம்ப்ளான் பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து லாரி டிரைவர் பாதர்வெள்ளை கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story