இறைச்சி கடைக்காரரை கடத்தி சென்று தாக்குதல்; 2 பேர் கைது
சோழவந்தான் அருகே இறைச்சி கடைக்காரரை கடத்தி சென்று தாக்கிய சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே இறைச்சி கடைக்காரரை கடத்தி சென்று தாக்கிய சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கடத்தல்
சோழவந்தான் அருகே நடுமுதலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 30). இவர் தினமும் மதுகுடித்து விட்டு போதையில் மந்தை பகுதியில் நின்று கொண்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளர் அருண்தவசி(40) என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சுந்தரபாண்டி மற்றும் சுந்தரவல்லி, நாராயணபுரம் கிராமத்தைச்சேர்ந்த பாண்டி(50) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் ஆட்டோவில் அருண்தவசியை ஏற்றினர். பினர் அவரை நாராயணபுரத்திற்கு கடத்திச்சென்று அங்கு வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
2 பேர் கைது
இந்த கடத்தல் சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார், நாராயணபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்கே படுகாயத்துடன் இருந்த அருண்தவசியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைத்தம்பி, பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய சுந்தரபாண்டி, சுந்தரவல்லி ஆகிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடுமுதலைக்குளம் கிராமத்தில் பரவியதால் அருண்தவசியின் உறவினர்கள் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story