உண்ணாவிரதம் இருந்த 36 பேர் கைது
மேலூர் அருகே உண்ணாவிரதம் இருந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர், ஜூலை
மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில் வசிப்பவர் காந்தி. இவரது 2 மகன்களும் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களது வீட்டுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் மெய்யர், துணை செயலாளர் பெரியவர் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். இதைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை மீறி, கூட்டம் கூடியதாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் உண்ணாவிரதம் இருந்த பெண்கள் உடபட 36 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்ததால் மேலூர் தாசில்தார் இளமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி சில நாட்களில் குடி தண்ணீர் மற்றும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் மாலை 6 மணியளவில் கைது அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story