மாவட்ட செய்திகள்

குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு + "||" + Scythe cut for 2 people in a drunken brawl

குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
கள்ளிக்குடி அருகே குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சிறைக் காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,ஜூலை
கள்ளிக்குடி அருகே குடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக சிறைக் காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறைக் காவலர்
கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 25). இவர் மதுரையில் சிறை காவலராக பணியாற்றி வந்தார். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னம்பட்டியைச் சேர்ந்த தனது நண்பர்கள் முத்து இருளன் (21), ஹரிஹரன் (23), சரவணக்குமார் (22) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது அங்கு கள்ளிக்குடி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கருணா (22) உள்ளிட்ட 4 பேர் மது அருந்த வந்துள்ளனர். இதில் திடீரென 2 கோஷ்டியினர் இடையே பிரச்சினை உருவாகி வாய்த் தகராறு ஏற்பட்டது. 
பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதைத் தொடர்ந்து மாரிச்செல்வம் தரப்பினர் அரிவாளால் கருணா மற்றும் கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக சிறைக் காவலர் மாரிச்செல்வம், முத்துஇருளன், சரவணக்குமார், ஹரிஹரன் ஆகிய 4 பேரையும் கள்ளிக்குடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு
கமுதியில் 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
2. வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
திருவேங்கடம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
3. சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
4. முதியவருக்கு அரிவாள் வெட்டு
சுரண்டை அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
5. உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
உடற்பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது