பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, ஜூலை
மதுரை நகரில் சூதாட்டத்தை தடுக்க போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர். அப்போது ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தெற்குவாசலை சேர்ந்த ராஜேஸ்கண்ணன் (வயது 37) உள்ளிட்ட 11 பேைர கைது செய்த தெப்பக்குளம் போலீசார் 18 ஆயிரத்து 540 ரூபாய் மற்றும் 5 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று எஸ்.எஸ்.காலனி போலீசார் தானதவம் பகுதியில் சீட்டு விளையாடிய மாடக்குளத்தை சேர்ந்த தனசேகரன் (34) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தார். மேலும் மாடக்குளம் கண்மாய்கரை பகுதியில் சீட்டு விளையாடிய செந்தில்குமார் (40) உள்ளிட்ட 5 பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து 6,060 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அண்ணாநகர் போலீசார் வண்டியூர் வைகை ஆற்றுப் பகுதியில் சீட்டு விளையாடிய முனீஸ்வரன் (29) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 2,260 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story