மாவட்ட செய்திகள்

அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரிய மனு ஒத்திவைப்பு + "||" + Postponement of petition seeking emergency leave for Attak Pandi

அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரிய மனு ஒத்திவைப்பு

அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரிய மனு ஒத்திவைப்பு
அட்டாக் பாண்டிக்கு அவசர விடுப்பு கோரிய மனு மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை, ஜூலை.
பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அட்டாக் பாண்டி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய மனைவி தயாளு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவரின் தாயார் ராமுத்தாய் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.அவரை சந்தித்து ஆறுதல் கூற, எனது கணவருக்கு அவசர விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இதே கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இதையும் சேர்த்து பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.