மாவட்ட செய்திகள்

மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் + "||" + Tamil Nadu Farmers' Union protests, urging the central government not to allow the dam in Megha Dadu

மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் உள்ள அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர்,

கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கட்டக்கூடிய அணையை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட கலெக்டர் மூலம் மத்திய அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


இந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ஜீவா, திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கட்டக்கூடிய அணையை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி திருவாரூரில், இந்திய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட கோரி திருவாரூரில் இந்திய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
5. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.